அரியமங்கலம்.அல்நூர் இஸ்லாமிய சேவை குழு மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருச்சி,மார்ச்,1: திருச்சி மாவட்ட அரியமங்கலம் தெற்கு பகுதியில் அல்நூர் மதரஸா (பாடசாலை)அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,
இதன் தொடக்கமாக இன்று அப்பகுதியில் அடிக்கல் நாட்டு விழா அல்நூர்இஸ்லாமிய சேவை குழு தலைவர் அக்பர் தலைமையில் நடைபெற்றது,
இதில் நிர்வாகிகள் செயலாளர் உஸ்மான், கௌரவ செயல் தலைவர்கள் சாகுல், இஸ்மாயில், கௌரவத் தலைவர் சிப்பாயத்துல்லா, துணைச் செயலாளர்கள் பேன்சி நவ்ஷாத், இர்ஷாத் அலி, பாபு, துணைத் தலைவர்கள் காதர், நபி,நாசர்,மற்றும் மஹலாவாசிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கலிஃபா பள்ளிவாசல் மோதினார் உஸ்மான் இறைவசனம் கூறினார், அல்நூர்இஸ்லாமிய சேவை குழுகௌரவ தலைவரும் அரியமங்கலம் உலாமாக்கள் ஜமாத் தலைவருமான டி.கே.முகம்மது இஸ்மாயில் துவக்க உரையாற்றினார்,
கலிபா பள்ளிவாசல் இமாம் உமர் பாரூக், அஞ்சுமன் ரஹ்மத் பள்ளிவாசல் இமாம் முகமது ஜலாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,
சிறப்பு விருந்தினராக அன்வாரி பாஜில் மழாஹிரி முகமது ஜலாலுதீன் கலந்து கொண்டு கிப்லா கல் அடிக்கல் நாட்டினார்,
சிறப்பு அழைப்பாளராக மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்,
விழாவின் முடிவில் பொருளாளர் அல்லாபிச்சை நன்றி கூறினார்