கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்!
திருச்சி, மார்ச், 1: வீட்டு உபயோக சமையல் எரிவாயு 50 ரூபாய், வணிக எரிவாயு விலை 322.50 பைசா உயர்த்தப்பட்டிருப்பதை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் உறையூர் மேற்கு பகுதி தலைவர் ஆயிஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் பார்வதி, முன்னாள் கவுன்சிலர் புஷ்பம், பகுதி செயலாளர் லலிதா ஜான்ஸி, மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரி, பகுதி குழு உறுப்பினர் சுமதி, மணியம்மாள், புவனேஸ்வரி, சாந்தி, வனஜா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் மீனா, பரமேஸ்வரி, தனலட்சுமி, ஜெயந்தி, பானுமதி, மகேஸ்வரி உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.
அத்திவசியம் பொருளான சமையல் எரிவாய் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துஅதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் யிட்டு சமையல் எரிவாயு உருளையை பாடையில் சுமந்து, மாலை அணிவித்து இறுதி ஊர்வலம் நடத்தினர்.