தலித் விடுதலை இயக்கம் சானாதான விளக்க கூட்டம்

தலித் விடுதலை இயக்கத்தில் சார்பில் சானாதான விளக்க பொதுக்கூட்டம் - மாநில தலைவர் கருப்பையா பேட்டி 



திருச்சி, டிச,26:                                          தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சசிகுமார், மாநிலத் துணைத் தலைவர் வடிவு, மாநில இளைஞரணி செயலாளர் சென்னை கிச்சா மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் கருப்பையா கூறுகையில்

வரும் ஜனவரி 27ஆம் தேதி திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் சுப.வீரபாண்டியன், ஆகியோரை கொண்டு சனாதான விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடத்துவது, இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் சட்ட பயிற்சியும்,  விதிமுறை குறித்த பயிற்சியும் மதுரையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form