கடவுள் ஆபிரகாமுக்கு அருளிய ஆசிர்வாதத்தை உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் அருளுவாராக!
திருச்சி, டிச.26:
கிறிஸ்துவிற்கு பிரியமான என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே கிறிஸ்துமஸ் என்றாலே புத்தாடை அலங்காரம் குடியமைப்பு வித விதமான நட்சத்திரங்கள் என்ற ஆடம்பரத்தோடு முடியாமல் இறைபாலகன் நம்மில் வீதைந்துச் சென்ற சமத்துவம் சகோதரத்துவம் பிறரன்பு என்பதை தொடந்து வாழும் போது நம்மில் பிறக்கிறது கிறிஸ்து பிறப்பு பெருவிழா,
பல ஆண்டுகள் கடந்தும் பழைமை மாறா பொலிவோடு திகழும் இக்கிறிஸ்துமஸ் நமக்கு உணர்த்துவது பிறருக்கு உதவி செய்வது ஆனால் உதவி செய்வது மட்டுமல்லாமல் நோயுற்றோரின் மருத்துவராக காயம் ஆற்றும் மருந்தாக தனியையில் இருக்கும் ஆதரவற்றவரோடு இனிய சொற்களை பேசும் போது இம்மானுவேல் என்ற சொல் அர்த்தம் பெறுகிறது
அதாவது இம்மானுவேல் என்று பொருள்படும் கடவுள் நம்மோடு என்று சொல்லின் பொருளை அழமாக அறியச்செய்கிறது, அன்பான சொல் கூட இறையரசரின் கிறிஸ்து விழாவை ஒளியூட்ட செய்கிறது இந்த கிறிஸ்துமஸ் தின விழாவில் நாம் பிறரின் வாழ்வில் ஒளியூட்டும் கிறிஸ்துவாக மாறவும் பாலகன் இயேசுவின் ஆசீர் உங்கள் மேல் தங்கவும் என்றும் மகிழ்ச்சியில் திகழவும்
கடவுள் ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் அருளுவாராக என வாழ்த்துகின்றேன் டங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
ஆரீரும்.இறையசீரில் அருட்தந்தை எம். பெர்க்மான்ஸ்,சேச திருச்சிராப்பள்ளி



