வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான 13வது கூடோ போட்டிகள் - வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கடந்த அக்டோபர் மாதம் 24முதல் 30ஆம் தேதி குஜராத் மாநிலம், சூரத்நகரில் தேசிய அளவிலான 13வது கூடோ போட்டி மற்றும் 3வது கூடோ ஃபெடரேஷன் கப் போட்டிகள் நடைபெற்றது. 


இதில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி அந்தமான் நிக்கோபார், உத்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா  ஹரியானா உள்ளிட்ட   பல்வேறு மாநிலங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட வீரர்-  வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில் தமிழகத்திலிருந்து  திருச்சி, நாமக்கல்,  கோயமுத்தூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 54வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் 5தங்கம்பதக்கமும், 6வெள்ளி பதக்கமும்,  11வெண்கலம் பதக்கங்களும் என 22பதக்கங்கள் வெற்றனர்.

இதில் திருச்சி மாவட்ட சார்பாக பங்குபெற்ற 13வயது, 48 எடை பிரிவில் பிரேம்சாய்,  வெண்கலபதக்கமும், 21வயதுக்கு மேற்பட்டோர் 210 எடை பிரிவில் இலக்கியா வெண்கல பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் நேற்று இரவு  ரயில் மூலம் திருச்சிக்கு வந்தனர். 

அவர்களை திருச்சி ரயில் நிலைய மேலாளர் விருத்தாச்சலம்  பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். 

இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு கூடோ சங்கத்தின் தலைவரும் பயிற்சியாளருமான கந்தமூர்த்தி மற்றும்  பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்த வருடம் மே மாதம் ஜப்பானில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 இந்த கூடோ விளையாட்டு SGFI தேசிய பள்ளி விளையாட்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது

Post a Comment

Previous Post Next Post

Contact Form