திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி

 அவனுள் அவள் என்ற திட்டத்தினை LemonAid ChariTea Foundation என்ற நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு பயிற்சி



திருச்சி, அக், 31                                கோரோட் அறக்கட்டளை சார்பில் திருநங்கையாின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அவா்களின் சமூக அந்தஸ்த்தினை வலுப்படுத்தி பொது வெளி சமூகத்தில் அவா்களின் பங்களிப்பினை உறுதி செய்யவும் அவனுள் அவள் என்ற திட்டத்தினை LemonAid ChariTea Foundation என்ற நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.  


அதை தொடர்ந்து கோரோட் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பத்மாவதி மற்றும் வசந்தன்,பயிற்சி மேலாளாா் ஆகியோா்  துறையூரைச் சாா்ந்த 22 திருநங்கையருக்கு திட்ட விளக்கக் கூட்டம் துறையூா் பழைய முனிசிபல் அலுவலகத்தில் நடத்தினாா்.  


இத்திட்டத்தின்படி திருநங்கையா்களின் கல்வி தகுதி, தனித்திறன்கள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அவா்களின் செயல்திறனை வலுப்படுத்தி அவா்களுக்கு நிலையான வருமானத்திற்கான வழிவகை செய்வதாகும். காேரோட் அறக்கட்டளையின் அவனுள் அவள் திட்டமானது, அரசு திட்டங்கள், தன்னாா்வலா்கள், சேவை நோக்கில் செயல்படும் பொது நிறுவனங்களின் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன்  செயல்படும் என்று விளக்கி பேசினர்

இந்த திட்ட விளக்ககூட்டத்தினை தொடா்ந்து திருநங்கையருக்கு ஒரு வார கால பயிற்சி துறையூாில் வழங்கப்படவுள்ளது.

எனவும் இந்த பயிற்சியில் திருநங்கையருக்கு தன்னை அறிதல், அவா்களின் மன நலம் மற்றும் நல்வாழ்வு, தொழில் முனைவோருக்கான தகுதிகள், துறையூாில் உள்ள வளங்கள் அடிப்படையில் அவா்களுக்கு உகந்த தொழிலை அடையாளம் காணுதல், சிறந்த தொழில் முனைவோரின் வாழ்வினை விளக்குதல் போன்ற விஷயங்கள் பற்றி கலந்துரையாடி அவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கவுள்ளது. எனதெரிவித்தனர்.

மேலும் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 9 ம் தேதிவரை அடுத்தகட்ட பயிற்சிநடைபெற உள்ளது என கூறினர்

இந்நிகழ்சிக்கு ஒத்தழைப்பு கொடுத்த நகர்மன்ற துனைத் தலைவர் இந்து அறங்காவலர் துறை அமைப்பாளர்  முரளி,  நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் தண்டவமூர்த்தி,நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் முத்து முகம்மது, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் திவாகர், உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்ச்சியின் முடிவில் சமூக ஆர்வலர் லாவண்யா நன்றி கூறினார்


Post a Comment

Previous Post Next Post

Contact Form