குழந்தைகளுக்கு ஆணா சொல்லி கொடுத்த மாமன்ற உறுப்பினர்

விஜயதசமி முன்னிட்டு திருச்சி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை


திருச்சி, அக், 05:                               விஜயதசமி முன்னிட்டு தமிழக முழுவதும பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று மாணவர்களின் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமையில் நடைபெற்றது. 


பள்ளியில் சிறப்பு ஹோமத்துடன் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் கலந்து கொண்டு மாணவரை தனது மடியில் அமர வைத்து நெல்லில் "ஆ"என்று எழுத பழகினார். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மடியில் அமர வைத்து முதல் எழுத்தான "ஆ"என்கின்ற முதல் எழுத வைத்தனர்.

தொடர்ந்து பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம் மற்றும் புத்தகபை வழங்கப்பட்டது. ஏற்கனவே இப்பள்ளியில் முதலாம் வகுப்பில்165 மாணவர்கள் படித்து வரும் நிலையில் விஜயதசமியான நாளான இன்று மேலும்


 13மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது.இதேபோல எல்.கே.ஜி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.



Post a Comment

Previous Post Next Post

Contact Form