4000 டாலருக்கு விற்கப்பட்ட இந்திய பட்டதாரி

 வெளிநாட்டிற்கு விற்கப்பட்ட தமிழக இளைஞரை ஒரு மாத தொடர் போராட்டத்தால் மீட்ட எஸ்டிபிஐ கட்சி


திருச்சி, அக், 05:                    கம்போடியாவில்  4000 டாலருக்கு விற்கப்பட்ட இந்திய பட்டதாரியை SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி,தலைமையில், காவல் துறை உதவியுடன் தொடர் முயற்சிக்கு பின்பு இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.


அவரை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, மாவட்டச் செயலாளர் ஏர்போர்ட் மஜீத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னகர் ரபீக் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று, பாதிக்கப்பட்டவரை  அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை சார்ந்த பட்டதாரி சையது என்பவர்  திருச்சி ட்ராவெல் ஏஜென்டால் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு கம்போடியாவில் உள்ள கம்பெனிக்கு விற்கப்பட்டார்.

படிப்பிற்கு ஏற்ப வேலை தராமல் சட்டத்துக்கு புறம்பான பணிகளை செய்யச் சொன்னதால் சையத் அந்த வேலையை செய்ய மறுத்துள்ளார். உடனே அவரை கடுமையாக தாக்கி உணவு கொடுக்காமல், துப்பாக்கி முனையில் பல கொடுமைகளை அங்கே அரங்கேற்றி உள்ளனர்.

சையத் உடனே எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையை  தொடர்பு கொண்டு தன்னை மீட்குமாறு கோரிக்கை வைத்தார், இதன் அடிப்படையில் ஒரு மாத காலமாக பல்வேறு முயற்சிகளின் மூலமாக இன்று சையது மீட்கப்பட்டார், ஆனால் இதேபோன்று நானூருக்கும்  மேற்பட்ட நபர்கள் அங்கே கொத்தடிமைகளாக இருப்பதாகவும், அவர்களையும் மீட்க வேண்டும் என்று மாநில முதல்வருக்கு SDPI கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மீட்கப்பட்ட பட்டதாரி சையத் மற்றும் குடும்பத்தினர் தனக்கு உதவி செய்த SDPI கட்சி நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இவரை போன்றே அங்கே பாதிக்கப்பட்ட மற்ற நபர்களையும் மீட்க அரசுடன் இணைந்து சட்டரீதியான பணிகளை மேற்கொள்வோம் என்று SDPI கட்சியினுடைய மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி  தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form