எஸ்டிபிஐ, கட்சி சார்பில் சதுரங்க போட்டி MLA துவக்கி வைத்தார்

 திருச்சி, ஆகஸ்ட் 14:                                      75 வது  சுதந்திர தினத்தை  முன்னிட்டு இந்திய தேசியகொடியை  வடிவமைத்த சுரைய்யா  தியாப்ஜி அவர்களின் நினைவாக  SDPI கட்சி திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதி 21 வது  வார்டு சார்பாக சதுரங்க போட்டி வார்டு தலைவர் இஸ்மாயில்  தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி,திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்,ஆர்வமுடன் மாணவர்கள்,இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சதுரங்க போட்டியில்  விளையாடினர்.போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு தர்கா  கிளை நிர்வாகத்தால் பரிசுகள் வழங்கப்பட்டன

Post a Comment

Previous Post Next Post

Contact Form