இறுதியாக ரயில்வே துறையை குறி வைத்திருக்கின்றனர்

எஸ் ஆர் எம் யூ திருச்சி கோட்டம் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள நமச்சிவாய அரங்கத்தில் எஸ்.ஆர்.எம்.யூபொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்.ஆர்.எம்.யூ அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் நிர்வாகிகள் மணிவண்ணன், பழனிவேல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்ஆர்எம்யூ.அகில இந்திய தலைவர் ராஜாஸ்ரீதர்,மோடி அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது

 


இதன் காரணமாக ரயில்வே தொழிலாளர்களின் குறைக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தனியார் மையம் ஆக்குவதால் ரயில் பயணம் செய்யும் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனை தொழிலாளி மத்தியில் கொண்டு செல்வதற்காகவும் புதிய ஓய்வு திட்டத்தில் ஓய்வூதியம் இல்லாத திட்டமாக இருக்கிறது. சமூக பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை மத்திய அரசு ஏற்படுத்த நினைக்கிறது.

இதனை அனைத்து தொழிலாளர் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு அமைப்பாக சந்தித்து வருகிறோம். 

தொடர்ந்து பிரதமரும் மத்திய அமைச்சரும் ரயில்வே துறை தனியார் மையமாகாது என்ன கட்டமைத்துக் கொண்டு வருகின்றனர். விமானத்துறைக்கு ஒரு மந்திரி இருக்கிறார். ஆனால் விமானம் இல்லை இதே போல ரயில்வே துறைக்கு அமைச்சர் இருப்பார் ஆனால் ரயில் இருக்காது. ரயில்வே துறையில் நிதி ஆதாரமில்லை என்பது மோசடியான விவாதம் ஆகும். பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும்  தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் ஏழைகளுக்கு நிதி இல்லை என்பது ஏற்புடையதாக இல்லை. மின்சார மசோதா இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து இந்தியா முழுவதும் ஊழியர்கள் இன்று கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். அந்த மசோதா அமலுக்கு வந்தால் இலவசம் மின்சாரம் பெறும் விவசாயிகள், விசைத்தறி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மின் மசோதா என்பது தனியார் மையத்தின் முதல் படிக்கட்டு ஆகும். தொடர்ந்து எல்லா துறையிலும் தாக்கப்பட்டிருக்கிறது இறுதியாக ரயில்வே துறையை குறி வைத்திருக்கின்றனர். தொடர்ந்து ரயில்வே துறை அலுவலர்கள் இறுதியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்தார். பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவருவோம்  என மத்திய, மாநில அரசு ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள். ராஜஸ்தான மாநிலத்தில் இதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாநில அரசு கொடுத்தாலும் மத்திய மோடி அரசு ரயில்வே தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வட மாநிலங்களில் அதிக பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு ஏராளமானோர் பயிற்சி பெறுகிறார்கள். அதே போல அவர்கள் அவர்களின் தாய் மொழியில் தேர்வெழுத வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது அதன் காரணமாகவே ரயில்வே துறையில் அதிகமான வட மாநிலத்தவர் பணியில் இணைகிறார்கள் என தெரிவித்தார

Post a Comment

Previous Post Next Post

Contact Form