ஒபிசிபிரிவினருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

 திருச்சி அகில இந்திய  பிற்படுத்தப்பட்ட வகுப்பினஇரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக திருச்சி  கோட்ட மேலாளர் அலுவலக  நுழைவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் அப்சல், அறிவுரையின் படி திருச்சி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், மற்றும் சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச் செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன், முன்னிலையிலும்,   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தென்னக இரயில்வே முழுவதும் ஒபிசி இன தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும், ஒபிசி.பிரிவினருக்கான பின்னடைவு,பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு, பொருளாதார இழப்பை தடுக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இன்நிகழ் ஒருங்கிணைத்தார் சகாய விஜய் ஆனந்த் கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form