திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக் கொடியினை ஏற்றுவதனைத் தொடர்ந்து , மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவின் வாயிலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேசியக் கொடி தயாரிக்கும் பணிகளை மிகுந்த கவனத்துடனும், சிறப்பாகவும் மேற்கொள்ள அறிவுரைகளை வழங்கினார்.