திருச்சி, ஆகஸ்ட், 19: திருச்சி பழைய பால்பண்ணை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உள்ளுர் அரியமங்கலம் செல்லும் வழி கல்லாங்குத்து பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் நடுவே ஒரு பிரிவினர் மேம்பாலத்தை வைப்பதாக அறிவித்துள்ள நிலையில்
மற்றோரு பிரிவினர் கல்லாங்குத்தைச் சேர்ந்த மக்களின் சுடுகாடு இருப்பதாகவும் , மேலும் இறந்தவர்களின் ஈமச்சடங்கு அங்கே நடைபெறுவதாகவும் , ஈமச்சடங்கு முடித்து உய்ய கொண்டான் ஆற்றங்கரையில் தான் அஸ்தியை கரைப்பதாகவும் கூறி மேற்படி இடத்தில் இரும்பு நடைபாதை மேம்பாலத்தை குறுக்கே வைக்க கூடாது என ஏதிர்ப்பு தெரிவித்ததுள்ளதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிடுவாத கூறி ஒரு தாரப்பினர் அங்கு வந்துள்ளனர் இதை அறிந்த மற்றோர் தரப்பினரும் அங்கு வர தொடங்கினர், தகவல் அறிந்த அரியமங்கலம் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் வருவதாக காத்திருந்த மக்கள் ஆட்சியர் வரவில்லை என தகவல் வந்ததாக கூறி இரு பிரிவினரும் அமைதியாக கலைந்து சென்றனர்,
மேலும் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது சம்பந்தமாக பல மாதங்களாக இந்த பிரச்சனை நடைபெற்று வருவதாகவும் இரு தரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இப் பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்,
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது