எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்

 எஸ்டிபிஐ கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய கிராம அலுவலகர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது


திருச்சி, ஆகஸ்ட், 18:                        எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர்  மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில்  எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை  ஹிந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில்  முன்னறிவிப்பின்றி  எடுத்துச் சென்ற அதிகாரிகளை கண்டித்து பெட்டவாய்த்தலை  பகுதியில்  எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாவட்ட தலைவர் திருச்சி முபாரக் அலி  தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத், மாவட்ட செயலாளர் மதர் ஜமால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  அப்பாஸ், மர்சூத் ஆகியோர் சமுக ஊடக அணி மண்டல தலைவர் ரியாஸ் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜிஸ்,பெட்டவாய்த்தலை கிளைத்தலைவர் யாசர் ஆகியேர் கலந்து கொண்டு

கொடி கம்பத்தை அகற்றிய  ஸ்ரீரங்கம் கிராம அலுவலரை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சாலைமறியல் போராட்டத்தில்,ஈடுப்பட்டனர், 


சாலை மறியலில் ஈடுப்பட்ட நிர்வகிகள் தொண்டர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form