திருச்சி, ஆகஸ்ட் 18: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சங்க காலக் காசுகளில்யானை சின்னம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில்,
சங்க காலக் காசுகளில், மறு பக்கத்தில் பொறிக்கப்படும் சின்னங்களில் பிரதானமாக உள்ள ஒரு சின்னம் யானை ஆகும். இதுவரை கிடைத்த சங்க கால காசுகளில் மூவேந்தர்கள் அனைவருமே யானையையே அதிகம் பொறித்து உள்ளனர். இந்த யானைகள் தனியாகவோ குதிரை, மங்கலச் சின்னங்கள், காவல் மரம் போன்றவைகளுடன் சேர்ந்தோ காணப்படுகின்றன என்றார்.
செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜுஸ், முகமது சுபேர், ரமேஷ், கமலக்கண்ணன், சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்