தேசியக் கொடியை வடிவமைத்தது, யார்?

திருச்சி, ஆகஸ்ட், 16:                                  75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொடிகள் ஏற்றி கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட 21வதுவார்டு தர்கா கிளை சார்பாக இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா தியாப்ஜி, மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது,

 


இதில் SDPI கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மர்ஹூம் சயீத் சாப்  அரங்கத்தில் தர்கா கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையேற்றர்

மாவட்டத்தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் மதர் ஜமால்முகமது, மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத்  மற்றும் கிழக்கு தொகுதி தலைவர் முஸ்தபா, தொகுதி துணைத்தலைவர் முகமதுவாசிக்  மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு தொகுதி துணைச்செயலாளர் அப்துல்அஜிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் ஹஸ்ஸான் பைஜி, திமுக தர்கா பகுதியின் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம், திமுக வட்டச் செயலாளர் முபாரக்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியாளர்களுக்கும்  கேடயமும்,சான்றிதழ்களும் கிளை நிர்வாகிகள் வழங்கினர்,

 மேலும்,இந்திய திருநாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தது யார்?      இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்  சுரையா தியாப்ஜி நினைவுகள்,சுதந்திர போராட்டத்தின் தியாகிகளின் தியாகங்கள் என்னென்ன என்று எடுத்துரைக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபி கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form