திருச்சியில் பாஜகவினர் கைது

திருச்சியில் பாஜகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்


திருச்சி, ஆகஸ்ட், 16:                    மதுரையில் நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு விவகாரம்  - பாஜகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி திருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது


கடந்த இரண்டு நாளுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர்  விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது கார் மீது பாஜகவினர் காலணிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து திமுகவினர் தமிழக முழுதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதன் காரணமாக திருச்சி பிஜேபி நிர்வாகி ஜெயகர்ணன் உட்பட இதுவரை 6பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜகவின் நிர்வாகிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி காவல்துறையினரை கண்டித்து மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில்


50 க்கு மேற்பட்டோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து கைது செய்தனர். இதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில்  சுமார் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது

Post a Comment

Previous Post Next Post

Contact Form