உயர் ஜாதியினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்

உயர்ஜாதி இந்துக்களுக்கான வழங்கப்பட்டு வரும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் -   தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கையை ஆர்ப்பாட்டம்.

திருச்சி, ஆகஸ்ட், 16:                                தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் கோரிக்க ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியா அலுவலகம் அருகில் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், உயர்ஜாதி இந்துக்களுக்கான வழங்கப்பட்டு வரும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் நிர்வாகி முனுசாமி, சமூக ஜனநாயக நல கூட்டமைப்பின்  நிர்வாகி சம்சுதீன் உட்பட 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form