75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஆவின் நிறுவனத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,அதன் ஒரு நிகழ்வாக திருச்சி கொட்டப்பட்டு சாலையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது,
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர்,பெருமாள் கொடியினை ஏற்றி சிறப்பித்து இனிப்புகள் வழங்கினார்.
மேலும் சுதந்திர தினத்தின் நினைவாக பல்வேறு விதமான மரக்கன்றுகளும் நடப்பட்டது,
இதில் ஆவின் நிறுவனத்தின். தொ.மு.ச.தலைவர் தாடி மனோகர், செயலாளர் செல்வகுமார், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.