இதுதான் தூய்மை நகரமா முகம் சுளிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அலட்சியமா?
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தில்லை நகர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் சாக்கடை சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் குழந்தைகள் முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என பேருந்து நிறுத்தத்தில் நிற்கக்கூடியவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது, மேலும் சாக்கடை கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சிலருக்கு வாந்தி மயக்கம் வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்
திருச்சியின்முக்கிய பகுதியான மத்திய பேருந்து நிறுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடத்தில் இப்படி குப்பைகளும் சாக்கடையும் சுத்தம் செய்யாமல் அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்,
ஒருபுறம் தூய்மை இந்தியா தூய்மை நகரம் என அரசு சார்பில் பல்வேறு வண்ண விளம்பரங்கள் செய்தாலும் அது விளம்பரமாகவே உள்ளதாகவும் கூறுகின்றனர், எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தூய்மை பணியை மேற்கொண்டு நோய்கள் பரவாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது,
நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?