மனித கடத்தலுக்கு எதிரான தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனித கடத்தலுக்கு எதிரான தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பங்கேற்றார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இனைந்து மாவட்ட சமூக நலத்துறை சார்பாக நடத்தும் மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் நிகழ்ச்சி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடை பெற்றது, இதில் கூடுதல் கண்கானிப்பாளர் குத்தாலிங்கம், தலைமை வகித்தார்,

பிஷப் ஹீபர் கல்லூரியின் பிளாரன்ஸ் ஷாலினி வரவேற்புரையாற்றினார் மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீவித்யா, குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் வழக்கறிஞர் விஜயா.பாபு, மகளிர் மேம்பாட்டுத் திட்டமையம் இயக்குனர். சீத்தா லெட்சுமி, அபி அறக்கட்டளையின் மருதநாயகம், பிஷப் ஹீபர் கல்லுரியின் ரவி ஆகியேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 

பேசுகையில் மனித கடத்தலுக்கு ஏதிரான தினத்தை முன்னிட்டு இதுபோன்ற நிகழ்சியின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றோம். குழந்தை கடத்தல் பாலியல் வன்முறை சினை முட்டை திருடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது இதிலிருந்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் காதல் என்ற பெயரால் பாதிக்கப்படுகின்றனர். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்,ஆனால் உங்களில் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் யாரோ உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடுவீர்கள், உண்மையும் அதுதான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் செல்போன் பயன்பாட்டினை நன்மையான விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்தி குறைவான நேரத்தை செலவிட வேண்டும்நீங்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாணவிகளுக்கு பல்வேறு சட்ட திட்டங்கள் அதன் தண்டனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர், 

இதில் கல்லூரி மாணவிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயன்பெற்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form