எஸ்டிபிஐ கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சிறப்பு பொதுக்குழு திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் திருச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்டத்தின் தலைவராக முபாரக் அலியை அறிவித்தார்,
மேலும்,திருச்சி வடக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக நியாமத்துல்லா மற்றும் பொதுச்செயலாளராக ஜவஹர் அலி ஆகியோரைஅறிவித்தார்,
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தொகுதி அணி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.