திருச்சி என் ஐடி சார்பில் ஆகஸ்ட் 6ம் தேதி 18. வது பட்டமளிப்பு விழா,
திருச்சி என் ஐடியின் இயக்குநர் அகிலா தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது,
ஃபெடரல் வங்கி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கலந்துகொள்கிறார்,
தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்18 ஆவது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி கோல்டன் ஜூப்லி கண்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது,
இதில் முன்னாள் மாணவரான ஃபெடரல் வங்கி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீ ஷ்யாம் சீனிவாசன் தலமையில் நடைபெற உள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் என் ஐ டி இயக்குனர் பேராசிரியர் அகிலா,பட்டதாரி மாணவர்கள் மற்றும் முனைவோர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்
மேலும் இந்திய தரவரிசையில் 2022 "இல் என்ஐடி திருச்சி அனைத்து என்ஐடிக்களிலும் 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது,
பொறியியல் பிரிவில் கடந்த ஆண்டு 66.08மதிப்பணியில் இருந்து முன்னேற்றம் அடைந்து ஒட்டுமொத்த 69.17 மதிப்பெண்களுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது மேலும் செமஸ்டர் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன.மேலும்பல்வேறு துறைகளுக்கான இணைப்பு கட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் விடுதி, ஸ்மார்ட் வகுப்பறைகள்,தொழில்நுட்ப உள்கட்ட அமைப்பு மேம்படுத்துதல்உள்ளிட்ட பல்வேறு பணிகளை என் ஐ டி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.