கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் ரயில் எண்.12664/12663 (திருச்சிராப்பள்ளி-ஹவுரா- திருச்சிராப்பள்ளி) எக்ஸ்பிரஸ் இன்று முதல் LHB ரேக்/பெட்டியுடன் இயக்கப்படுகிறது.
திருச்சி, ஆகஸ்ட், 2: பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் முயற்சியாக, LHB (Linke Hofmann Busch) பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட பயணிகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. LHB பெட்டிகள் விபத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் இலகுரக துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன, இது ICF பெட்டிகளோடு ஒப்பிடும்போது அதிக இருக்கை வசதி, வேக திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. உட்புறம் அலுமினியத்தால் ஆனது, ஒவ்வொரு கோச்சிலும் அதிக வேகத்தில் பயணிக்கும் போது திறமையான பிரேக்கிங் செய்வதற்கான "மேம்பட்ட நியூமேடிக் டிஸ்க் பிரேக் சிஸ்டம்" ("Advanced Pneumatic Disc Brake System" ) பொருத்தப்பட்டுள்ளது, நவீன உட்கட்டமைப்பு மற்றும் லக்கேஜ் ரேக்குகள்/ பெட்டிகள் மற்றும் பரந்த ஜன்னல்களில் விளக்குகளை ஒருங்கிணைக்கிறது.
ரயில்.எண்.12664/12663 (திருச்சிராப்பள்ளி-ஹவுரா-திருச்சிராப்பள்ளி) இன்று முதல் LHB ரேக்குகள்/ பெட்டிகள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இதனை திருச்சி கோட்ட மேலாளர் ஸ்ரீ மனிஷ் அகர்வால் கொடி அசைத்து துவங்கி வைத்தார்,
மேலும் மூத்த கோட்ட இயந்திரவியல் பொறியாளர் ஸ்ரீ ஹனுமான் மீனா மற்றும் பிற உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சியில் இருந்து முதன்மை பராமரிப்புடன் இயக்கப்படும் முதல் LHB கோச் ரயில் இதுவாகும், இந்த ரயில் திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரயில் இலக்கை அடைய 35 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த LHB ரேக்குகள்/ பெட்டிகளாக மாற்றுதல் மூலம் அதிக இருக்கை வசதி மற்றும் வேகத்துடன் கூடுதல் சஸ்பென்ஷன் திறன் கொண்ட அம்சங்கள் இதில் இடம் பெறும் இந்த பெட்டிகளை மாற்றுவதன் மூலம். பழைய ரேக்குகளுடன் ஒப்பிடும்போது LHB பெட்டிகளின் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் சிறப்பாக உள்ளது மற்றும் கோடை காலத்தில் பயணிகளுக்கு சிறந்த வசதியை அளிக்கும் நுண்செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. குளிர் காலங்களில் வசதிக்காக வெப்பமூட்டும் அலகுடன் இந்த அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இந்த LHB கோச்சுகளில் சென்டர் பஃபர் கப்ளிங் (CBC) வழங்கப்படுகிறது, இது அதிக பாதுகாப்பை உறுதி செய்கிறது. (These LHB Coaches are provided with Centre Buffer Coupling (CBC), which ensures greater safety.)
இன்று முதல் ரயில். எண். 17315/17316 (வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா) Exp ஏசி லோகோவுடன் இயங்குகிறது. வேளாங்கண்ணி பிரிவில் CRS ஆய்வு முடிந்த பிறகு ஏசி லோகோவுடன் இயக்கப்படும் முதல் ரயில் இதுவாகும்.
வேளாங்கண்ணியில் பிரிவில் CRS ஆய்வு 20-07-2022 அன்று நிறைவடைந்துள்ளது
என தெரிவித்தனர்