திருச்சி என்.ஐ.டி கல்லூரிக்கு புதிய இயக்குனர்:

 திருச்சி என்.ஐ.டி கல்லூரியின்  புதிய இயக்குநராகப் முனைவர்.ஜி.அகிலா பொறுப்பேற்றுக் கொண்டார்,



திருச்சி, பிப்.4:                                        

திருச்சி மாவட்டத்தில் உள்ள என் ஐ.டி.கல்லூரியில் பேராசிரியர் ஜி. கண்ணபிரான் பொறுப்பு இயக்குநராகச் செயல்பட்டு வந்தார் இந்நிலையில், அக்கல்லூரியின்  புதிய இயக்குநராகப் ஜி.அகிலாபொறுப்பேற்றுக் கொண்டார்.                                                                            இவர், முன்னாள் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் அவர்களைத் தொடர்ந்து 57 ஆண்டு பழமையான இந்நிறுவனத்தின் இரண்டாவது பெண் இயக்குநராகிறார்.

முன்னதாக முனைவர் அகிலா,  கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய என்.ஐ.டி புதுச்சேரியின் பொறுப்புப் பதிவாளராகப் பதவி வகித்தார். 


அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், பிளாக்செயின் தொழில்நுட்பம், பெருந்தரவு பகுப்பாய்வியல், ஆன்டாலஜி பொறியியல், வேதித்தகவலியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார்.


முனைவர் அகிலா அவர்கள், மிகச்சிறந்த கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் முத்திரை பதித்த, 32 ஆண்டு அனுபவத்தோடு வருவது குறிப்பிடத்தக்கது இவர் பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள் கல்லூரி பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form