பெண் தொழிலாளர்களுக்கான கோரிக்கை

 தோழி அமைப்பின் சார்பாக பெண் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கான கூட்டம் நடைபெற்றது



தோழி மாவட்ட பெண் தொழிலாளர் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு கூட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காகவும் திறன் மேம்பாட்டு பயிற்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது



இதில் சிபிஎம் விவசாய அணி இந்திரஜித்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர்.ரேணுகா, ஆகியோர் தலைமை தாங்கினர்

தோழி கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சீதாலட்சுமி, வரவேற்புரையாற்றினர்


தோழி அமைப்பின் மாநில அமைப்பாளர் சங்கர்,நிகழ்ச்சியின் நோக்க உரையாற்றினார் தோழி அமைப்பின் பயிற்சியாளர் ஜெய்எடில்பர்ட், தோழி அமைப்பின் மகாலட்சுமி, அண்ணாமலை, ஜூலி,ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பேசுகையில் பெண் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிற்சாலை பஞ்சாலை தொழிலாளர்கள் வெள்ளி பட்டறை டெக்ஸ் பட்டறை பின்னலாடை  அரிசி ஆலை முந்திரி தொழிற்சாலை மற்றும் பாக்கு சீவல் புகையிலை தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் பெண் தொழிலாளர்களின் நிலையை கண்டறிய பட்டதில் மிகவும் குறைந்த கூலி உழைப்பு சுரண்டல் வன்முறையான பணித்தளம் அரசு தொழிலாளர் நல சட்ட உரிமை மறுப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் பெண் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர் 


இவர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய கோரிக்கையாக அரசின் குறைந்தபட்ச கூலி சட்டத்தை அனைத்து தொழிற் சாலைகளிலும் உறுதி செய்யவேண்டும். வன்முறையற்ற வேலை சூழல் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

 தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்து பணியிடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.பெண் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். 


உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கூறினார்.  இக்கூட்டத்தில் அதிகமானோர் பெண்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form