வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது
வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர்.வேங்கை ராஜாவின் பிறந்த நாள் 29ம் தேதி நேற்று மாலை கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில்வழக்கறிஞர் வேங்கை ராஜாவிற்கு சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
தனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்








