No title

 தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், மற்றும் வேளாண் அறிவியல் நிறுவனம் சார்பில் வேளாண் தொழில் நூப்ப பயிற்சி தொடங்கப்பட்டது


சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்றுனர்களுக்கான வாழை சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்கள் பயிற்சி சிறுகமணியில் உள்ள

 வேளாண் அறிவியல் நிலையத்தில் 29ம் தேதி தொடங்கப்பட்டு 30.ம் தேதி மற்றும் 01. ம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது

பயிற்சி வழங்குவோர்: வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பயிற்சி பெறுவோர் : சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்றுனர்கள் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இந்த பயிற்சி சமுதாயத்தில் வறுமை ஒழிப்பு என்ற செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு மூலம் வளத்தையும், அதன் நிலைத்த தன்மையையும் உருவாக்கி ஊரகப்பகுதியில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு சிறந்த திட்டமாகும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அந்தநல்லூர் மணிகண்டம் மணப்பாறை முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் 135 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் மூலமாக தனிநபர் மற்றும் குழு தொழில் முனைவோர்கள் மேம்பாட்டுப் பணிகள் தனிநபர் தொழில் மேம்பாடு, தொழில் குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத தொழில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதில் ஒரு அம்சமாக ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவில் இருந்தும், தேர்வு செய்யப்பட்ட முன்னோடி உழவர்கள் சமுதாயப் பண்ணைப் பள்ளி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் ஸ்பார்க் என்று அழைக்கப்படும் சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்றுனர் மூலம் சமுதாயப் பண்ணைப்பள்ளி உறுப்பினர்களுக்கு மண் மற்றும் நீர் பரிசோதனை முதற் கொண்டு அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், உற்பத்திப் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை பயிற்சி அளிக்கப்படும்.


அவ்வாறான முதல் பயிற்சி தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம்,வாழை சாகுபடி சார்ந்த திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் பகுதியைச் சார்ந்த தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் உள்ள சமுதாயப் பண்ணை பள்ளி பயிற்றுனர்களுக்கான மூன்று நாள் வாழை சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்கள் பயிற்சியானது சிறுகமணியில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சியினை  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, பயிற்சிகளைப் பார்வையிட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக் கையேட்டினையும் பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். 

மாவட்ட ஆட்சியர் வருகையின் போது வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படும் போது நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில் நுட்பம் மற்றும் வாழையில் விதை நேர்த்தி ஆகியவை சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகளால் செய்து காட்டப்பட்டது. 

மேலும், பாரம்பரிய அரிசி வகைகளான தூங்கும் நெல், பெரிமலை ஆகிய நெல் ரகங்களை உழவர் உற்பத்தியாளர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் பயிற்சிக்குப் பிந்தைய செயல்பாடுகள் குறித்து  தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் க.இ. ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட், விளக்கினார்


முனைவர் நா. தமிழ்செல்வன, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம்  வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட அலுவலர்கள், எம்.எஸ். சுவாமிநாதன், ஆராய்ச்சி மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாழை சார்ந்த சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form