தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் வரும் 10 தேதியேன்று சங்கம் புதிதாக துவங்க உள்ளதாக அறிவித்தனர்
திருச்சியில் நடைபெற்றதிருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைக்கப்பட்டு செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காயம் மண்டையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்பு ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மண்டல தலைவர்தமிழ் செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இதில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் வருகிற 10-ம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு புதிதாக தொடங்க உள்ளதாகவும்
நகை அடகு பிடிப்போர் கடை உரிமையாளர்கள் கூறுகையில் காவல் துறையினர் கையில் விலங்குடன் ஒரு நபரை அழைத்து வந்து அந்த நபரிடம் விசாரித்த போது இந்த நகை கடையில் தான் நகையை அடகு வைத்தாக அவன் சொன்னதாகவும் அதன் பெயரில் நகை அடகு கடையின் உரிமையாளர் மீது வழக்கு போடுவதாகவும் இதனால் அதிகமான நகை அடகு பிடிப்போர் கடை உரிமையாளர்கள் நகை கடை நடத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு தொழிலையே விட்டு விட்டு வருகின்றனர் மேலும் இது போன்று 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடபட்டுள்ளது அதை போல் நகை அடகு கடைக்கான சான்றிதழ் புதிப்பிக்கவும் காலதாமதத்தை ஏற்படுத்திகின்றனர் இது சம்மந்தமாகவும் மாவட்ட ஆட்சியர்யிடமும் தெரியபடுத்த உள்ளோம்
எனவே இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய அனைத்து நகை அடகு கடை உரிமையாளர்களை ஒன்றிணைத்து
இதனை தடுக்கும் வகையில் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் வருகின்ற பத்தாம் தேதி அன்று புதிய சங்கத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதில் நகை அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்