திருச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

 திருச்சி.திருவெறும்பூர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்   துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின்  பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்களை நவல்பட்டு காவல்துறை கைது செய்துள்ளனர்.



திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(61) இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.


 


இந்நிலையில் வழக்கம் போல் இரவு சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழக்கம்போல் சௌந்தர்ராஜன் அடுத்த நாள் காலை தனதுசூப்பர் மார்க்கெட்டை திறப்பதற்காக வந்து பார்த்த போது சூப்பர்மார்க்கெட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து

கடையின் உள்ளே சென்று பார்த்த பொழுது சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்து உள்ளது.


இதை அறிந்த அவர்உடனே கண்காணிப்பு கேமராவில் நடந்த சம்பவ பதிவுகளை போட்டு பார்த்த போது சூப்பர்மார்க்கெட் பூட்டை உடைத்து உள்ளே வந்த பூலங்குடி காலனியை சேர்ந்த ரமேஷ் மனன் சச்சின் (20) அவரது நண்பர் நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த குமார் மகன் வின்சென்ட் (19), திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் சந்தோஷ் (19) ஆகிய 3 பேரும்  சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் இருந்த கல்லாப்பெட்டி பார்துள்ளனர் கல்லாவில் ஒன்றும் இல்லாததால் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்திய கட்சி பதிவாகி உள்ளதை கண்டு  சௌந்தர்ராஜன், நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form