திருச்சி வரகனேரி டவுன் பள்ளியில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருச்சி வட்டம் மற்றும் டவுன் வரகனேரி பள்ளிவாசல். புதிய நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 26ம் தேதி வாக்குப்பதிவுடன் துவங்குகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ம் தேதி துவங்கியது 15ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் 16ஆம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கப்படும் இறுதியாக வருகிற 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று,
அன்று மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கி உடனடியாக முடிவுகள் தெரிவிக்கப்படும்,
அதன்பிறகு வரகனேரி பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் தேர்வுகள் குறித்த விவரம் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.
14/9/2021 நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் வக்ஃப் .கண்காணிப்பாளர் ஷரிப்ஹமது, வக்ஃப் ஆய்வாளர் ஜெய்லாபுதீன்,ஆகிய வக்பு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் டி.பி.எஸ்.எஸ். ராஜ் முகமது, தலைமையில் புதிய நிர்வாகக்குழு தேர்தலில் தலைவர் பதவிக்கு 9 பேர் கொண்ட குழு வேட்புமனு தாக்கல் செய்தனர் அதன்படி அப்துல்ஹக்கீம் ,அப்துல் மஜீத், அரப்ஷா, அப்துல்பஷீர், எம்.ஐ.ஈ.டி.சாகுல் ஹமீது, அப்துல் மாலிக், நசுருதீன், ராஜா முகமது, முகமது உசேன், ஆகியோர் வக்ஃபு அதிகாரிகளிடம் வேட்பு மனு அளித்தனர்.மேலும் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் மொத்தம்1567 ஆண்கள் வாக்குகள் உள்ளது இத்தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்ய தகுதி உடையவர்கள் என தெரிவித்தனர்