அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 5 இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக
தாய்த்திரு நாட்டினுடைய 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
முதலாவதாக அரியமங்கலம் 28வது கிளையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் R ஐனுல்லா மகுது தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தார். விமான நிலையம் 35 வது கிளையில் தேசிய பொதுச்செயலாளர் T முஹம்மது மீரான்சாஹிப் , தேசிய கொடியேற்றி சிறப்பித்தார்.
தென்னூர் கிளையில் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S ராஜா முஹம்மது, தேசிய கொடியேற்றி சிறப்பித்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில தலைவர் அ காஜா முகைதீன், தேசிய கொடி ஏற்றி சிறப்பித்து, இந்திய திருநாட்டடினுடைய சுதந்திர போராட்ட வரலாற்றிலும் சரி, சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை வரிசைப்படுத்தும் போதும் சரி ஒரு சமூகத்தினுடைய வரலாற்றை மட்டும் மறைப்பது வேதனை அளிக்கிறது.
திருப்பூர் குமரன் அவர்கள் குறித்த வரலாறு பேசப்படும் போது அவருடன் சிறை சென்று உயிர் நீத்த திருப்பூர் மொய்தீன் அவர்களை புறக்கணிப்பது சரியா என்று பல்வேறு வரலாற்றினை சுட்டிக்காட்டினார்.
பிறகு திருச்சி ஆழ்வார்தோப்பு கிளை யில் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றிய அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் அசாதிக் பாட்சா பாவா, கூறுைகையில்
எவன் ஒருவன் தன் தாய்நாட்டை நேசிக்கவில்லையோ அவன் என்னை சார்ந்தவன் அல்ல" என்ற நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அண்ணவர்கள் கூறியபடி வாழ்வியல் வழியில் தாய்த்திரு நாட்டின் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி போற்றி புகழ்ந்துவருகிறோம்.
உலக வங்கியினுடைய தலைமை பொருளாதார நிபுணராக இருக்கக்கூடிய கௌசிக் பாசு அவர்கள் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் " 1947 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் மக்கள் சுதந்திரத்திற்காக ஏங்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். தற்போது 2021 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்த வருகிறார்கள் என்கிற அவருடைய பதிவு இந்திய தேசம் ஒரு சுதந்திர நாடா?இல்லையா? என்ற கேள்வியை இந்த ஆட்சியாளர்களிடத்தில் வைக்கப் படுகிறது என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
டெல்லியில் 9 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை மிரட்டுவதும், உபி யில் சிறுபான்மை சமூகத்தைசேர்ந்த தந்தை மகன் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து மத கோஷங்களை எழுப்பி மகன் கண்முன்னே தந்தை கொடூரமாக தாக்கப்பட்டு, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்த காவல்துறைஅதிகாரியை பணிநீக்கம் செய்வது சசுதந்திர இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைக்குனிவு என்று சுட்டிக் காட்டினார்,
அண்மையில் நடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க் கட்சி எம்பிகளின் அமளியால் முழுவதும் ரத்து செய்யப்பட்டு, pegasus மென்பொருள் மூலம் மத்திய அரசு சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் உளவு பார்த்த விவகாரம், மூன்று விவசாய மசோதாக்கள், இந்திய தேசத்தினுடைய மோசமான பொருளாதார சூழ்நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு வழங்கப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் சுமுகமாக செயல்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்று சொன்னால் இந்த ஆட்சியில் சுதந்திர இந்தியாவின் நிலையை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
மகாகவி பாரதியார் அவர்கள் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" இன்று கூறியதுபோல தாய்மையையும் தாய் நாட்டையும் போற்றிப் புகழ்ந்து நேசித்து பாதுகாப்போம் என்று இந்த நன்னாளில் உறுதிமொழி ஏற்போம் என்று கூறினார் மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிக்கைகள் அனைத்தும் பாராட்டுக்குரியது விவசாயிகள் கடன் திட்டம் பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பயனுள்ள திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்
இதில்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஐனுல்லா மகுது திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ஷேக் அப்துல்லா தமிழ் மாநில பொதுச்செயலாளர் டி.ஜாவித் உசேன், தமிழ் மாநில செய்தி தொடர்பாளர் வி.பி.தீபக், திருச்சி மாவட்ட பொருளாளர் எம். உசேன் ஷரீப், மற்றும் வட்ட நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.