ஜி கே வாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார்  ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


இதில்  அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா2வது அலை மக்களை மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி கொரோனா நோயால் ஒருவர்கூட இறக்ககூடாது  தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கின்றேன் - 


இந்த தேர்தலில் 6 தொகுதிகள் பெற்றோம், ஆனால் எங்களால் வெல்ல முடியவில்லை, இனிவரும் காலங்களில்இயக்கத்துக்கு பலம் சேர்க்க வேண்டும்,புத்துனர்வு தர வேண்டும் என்று சுற்றுப்பயனம் மேற்கொண்டு வருகிறேன்.

மூப்பனார் காலத்தில் இருந்தே த.ம.க ஒரு கட்டுக்கோப்பான கட்சி,ஒரு குடும்பம் என்றே சொல்லலாம்  

திமுக கொரோனோ 2வது அலைதை கையாண்டது குறித்த கருத்து கொரோனோவில் அரசியல் கூடாது என்பது எங்கள் கட்சியின் கருத்து. மூன்றாவது அலையை சமாளிக்க கூடிய அளவில் கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் அதிமுக தோல்வி பின்னடைவு அடைய காரணம் என்று சிவி சண்முகம் கருத்து குறித்த கேள்விக்கு ;இது குறித்த நான் எதுவும் கூற முடியாது - கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்திற்கு தகுந்தார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.

முக்கியமாக : மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடை மடை வரை  செல்லவில்லை


இதனால் 20 நாளுக்கு முன்னர் போட்ட முளை பயிர் முளைக்காமல் போய் உள்ளது.அரசு  உடனடியாக கடை மடை வரை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

நீட் விவகாரத்தில் மாணவர்களை  குழப்ப வேண்டாம் -

நீட் விவகாரத்தை பொறுத்த வரை யார் கைகளிலும் இல்லை - நீதி மன்றத்யின் கையில் தான் உள்ளது,அதனால் அரசியல் வாதிகள் தங்களது லாபத்திற்காக இதில் அரசியல் செய்ய வேண்டாம்.


பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேச உள்ளேன். உள்ளாட்சி தேர்தல் வரும் போது தான் அப்போதைய கூட்டணி பற்றி முடிவை கூற முடியும்,

தடுப்பூசி வழங்குவதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை - காட்டவும் கூடாது எனவும் பத்திரிகையார் கேள்வின்போது பதில் அளித்தார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form