திருச்சி மாநகர காவல் ஆணையரகம்
வெளியிட்ட செய்தி
நாள் : 08.07.2021
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி கைது
திருச்சி மாநகரம், கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உடையான்பட்டி இரயில்வே
கேட் பிள்ளையார் கோவில் அருகில் கடந்த 17.06.2021 அன்று காலை
0630 மணியளவில்
கருப்பையா (41/21), த.பெ. வீரப்பன், பிள்ளையார் கோவில் தெரு, வடுகப்பட்டி, கே.சாத்தனூர், திருச்சி.
பழங்கள் வாங்குவதற்காக காந்திமார்க்கெட் செல்லும்போது, காரில் வந்த
ரவி (எ) சாமி ரவி (42/21), த.பெ.சிவசாமி, எண்: 13 உஸ்மான் அலி நகர், கே.கே.நகர், திருச்சி
மேற்படி கருப்பையா என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில்
வைத்திருந்த பணம் ரூ.5,500/-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டதாக கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு
காவல் நிலையத்தில் கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண்.316/21 u/s
294(b), 392 r/w 397, 506(i) இ.த.ச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புலன்
விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ரவி (எ) சாமி ரவி (42/21), த.பெ.சிவசாமி,
எண்: 13 உஸ்மான் அலி நகர், கே.கே.நகர், திருச்சி என்பவரை கைது செய்து நீதிமன்ற
காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட ரவி (எ) சாமி ரவி (42/21), த.பெ.சிவசாமி என்பவர் மீது
ஏற்கனவே திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் கடந்த சட்டமன்ற
தேர்தலின்போது ஒரு கட்சியினரால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த
பணத்தை கூட்டு கொள்ளையடிக்க மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி என பதிவு
செய்யப்பட்ட வழக்கு, திருச்சி மாநகரம், கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கும்,
தில்லைநகர் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், மணிகண்டம் காவல்நிலையத்தில்
கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளும், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர்
காவல்நிலையத்தில் கொலை வழக்கும், பாண்டிச்சேரி காரைக்கால் காவல்நிலையத்தில் கொலை
வழக்கும் பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரிய வந்தது.
எனவே, மேற்படி ரவி (எ) சாமி ரவி (42/21), த.பெ.சிவசாமி என்பவர் தொடர்ந்து குற்றம்
செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற
நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்
கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு
சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து இன்று (08.07.2021)
புதுக்கோட்டை சிறையில் இருந்து வரும் ரவி (எ) சாமி ரவி (42/21), த.பெ.சிவசாமி என்பவருக்கு
குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.