முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் திருச்சி மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம்

மாநகர செயற்குழு கூட்ட தீர்மானம்
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் திருச்சி மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம்
நத்தர்வலி தர்கா அருகில் உள்ள மாநகர இளைர் அணி செயலாளர் முனிருத்தீன் இல்லத்தில்
 நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அரசியல்
இடிமுரசு இஸ்மாயில், சிறப்புரையாற்றினார்.


மாநகர மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா,  தலைமை தாங்கினார். மாநகர
இளைஞரணி செயலாளர் முனிருதீன், வரவேற்புரை ஆற்றினார். பாலக்கரை பகுதி
செயலாளர் அப்துல்கரீம், நன்றி கூறினார்.கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹனீப், மாநில
இளைஞரணி தலைவர் சாதிக் கான், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பரீத், மாநில
அமைப்புச் செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட தலைவர் அரப்ஜான், மாவட்டப்
பொருளாளர் முபீன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் முஸ்தாக் அலி, கே.கே. நகர்
பகுதி செயலாளர் ஜவஹர், ஜோயல், விஜய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்:
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடுபோற்றும் நல்லாட்சியை வழங்கி வரும் தமிழக முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு இக்கூட்டம்
வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2:
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் ஆலிஜனாப். இடிமுரசு
இஸ்மாயில், கோரிக்கையை ஏற்று தமிழக காவல்துறையினரில் ஒரு இலட்சத்து
17 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா ஊக்கத்தொகையாக தலா ரூ.5.000 வழங்க
ஆணையிட்ட ,  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த
நன்றிகளைதெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3:
தமிழகத்தில் உள்ள பூசாரிகளுக்கு கொரோனா கால உதவித்தொகையாக
ரூ.4.000மும் அரிசி, மளிகைப்பொருட்களை வழங்கியது போல தமிழகத்தில் உள்ள
பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ்,இமாம்களுக்கும் ரூ.4.000 உதவித்தொகையும்,
அரிசி, மளிகைப்பொருட்கள் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4:
திருச்சி மாவட்டத்தில் ஆறு, குளங்களை சீரமைக்கவும், ஒருங்கிணைந்த புதிய பஸ்
நிலையம் அமைக்கவும் மற்றும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தவும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை உருவாக்கி மாண்புமிகு, தமிழக முதல்வர்
 மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்கு புகழ் சேர்த்திடும் வகையில் புயல்
வேகத்தில் செயல்படும் அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுக்களை
தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை தாறுமாறாக உயர்த்தி வரும்
ஒன்றிய அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ்
விலையேற்றத்தை கண்டித்து வரும் 13.7.2021 செவ்வாய் அன்று உறையூர். குறத்தெரு
அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Post a Comment

Previous Post Next Post

Contact Form