திருச்சி. காயத்துடன் அடிபட்டுக் கிடந்த மயிலை மீட்டுவனத்துறையிடம் ஒப்படைத்த பிரேட் கார் வாஷிங் நிர்வாக உரிமையாளர் அப்துல்ஹமீது
திருச்சி மாவட்டம் கோட்டை டேசன் சாலை மாரிஸ் தியேட்டர் எதிரில் தூங்கு மூஞ்சி மரம் ஒன்று உள்ளது இந்த மரத்தின் மீது ஏறிய மயில் தவறிக் கீழே விழுந்து அடிபட்டதில் பறந்து செல்ல முடியாமல் இறைக்கையால் படபட என அடித்து கொண்டு கீழே கிடந்து உள்ளது
இந்த சப்த்தத்தை கேட்ட அங்கிருந்த நாய்கள் மயிலின் சத்தம் கேட்டுகுறைக்க ஆரம்பித்துள்ளது அப்போது அந்த வழியாக தினசரி இரவு நடைப்பயிற்சி மேற்கொண்டு வரும் பிரைட்கார் வாஷிங் நிர்வாக உரிமையாளர் அப்துல் ஹமீது என்பவர் சப்தம் கேட்டு மரத்தின் அருகே சென்றபோது அங்கு அடிபட்டு கிடந்த மயிலின் அருகே நாய்கள் கூடியிருந்ததை விரட்டி விட்டு. வனத்துரையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்
தகவல் கிடைத்த வனத்துறையினர் விரைந்து வந்தனர் காயங்களுடன் அடிபட்டு கிடந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்த பிரைட் கார் வாஷிங் நிறுவன உரிமையாளர் அப்துல் ஹமீதை பாராட்டி மயிலை மீட்டு சிகிச்சைக்காக வனத்துறையினர் கொன்டுச்சென்றனர்