யூனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும்நிகழ்ச்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருச்சி பீமநகர் பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என்.நேரு, கொடியசைத்து துவங்கி வைத்தார் மேலும் இது போன்ற ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதை சிறப்பித்து அவர்களை பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்மேலும் ஜமாத்தின் மாநிலத் தலைவர்: பிமநகர் எஸ்.ரபிக், கூறுகையில் ஜமாத்தின் சார்பாகநோயினால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வது ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களுடன் நிவாரண தொகை வழங்குதல் அவசர மருத்துவ உதவி செய்தல் சாலையோர மக்களுக்கு உணவு அளித்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார் தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்து தொண்டு அமைப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக அரசுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளை செய்ய அழைப்பு விடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதனால் நாங்கள் புத்துணர்ச்சியோடு எங்கள் பணிகளை இன்னும் அதிகமாக செய்வதற்கு ஊக்கமாக உள்ளது என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜே. அப்பாஸ் அலி, மாநில பொருளாளர் பக்ருதீன், இர்பான், அன்ஷர், திருச்சி மாவட்ட தலைவர்: சாதிக், மாவட்டச் செயலாளர்: ஷேக் மைதீன், மாவட்ட பொருளாளர்: ஷாஹீன், முஸ்தபா, சதக்கத்துல்லா, கே எம், அன்சாரி, மரக்கடை காஜா, மீரா மைதீன், காதர்பாஷா, ஜாவித்,அன்வர், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
www.Maiyummeiyum.blogspot.com