திருச்சி, ஜூன், 11: குடியரசு கட்சி மாவட்ட தலைவரை பாராட்டிய பொது மக்கள் .
இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் ஏழைகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்து தருவது வீடு இல்லாத அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்து கொடுப்பது
மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் பெற்று தர ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார்,
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் குடிஉள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா வழங்க இந்திய குடியரசு கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி சுந்தரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இதனை அப்பகுதி மக்கள் பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர்