ராஜிவ் காந்தி ஜோதி யாத்ரா கமிட்டி சார்பாக,
பெங்களூரில் இருந்து ராஜீவை காந்தி ஜோதி ஏந்தி திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - திருச்சி - பாண்டிச்சேரி - ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் வழியில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் அமைந்துள்ள பாரத ரத்னா ராஜிவ் காந்தி சிலையில், 80 பேர் கொண்ட குழுவினரை, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
ராஜிவ் காந்தி சிலைக்கு மரியாதையை செலுத்தியபின்பு வழியனுப்பினர். நிகழ்வில் கமிட்டி தலைவர் துரை, கிஷோர் பிரசாத், ஸ்ரீனிவாசப்பா, மாணிக்கம், மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணை தலைவர் எஸ்.வி. படேல், கோட்ட தலைவர் பிரியங்கா படேல், வார்டு தலைவர்கள் ஆனந்த பத்மநாபன், பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.