4 லட்சம் நிதி உதவி

4 லட்சம் நிதி உதவி



திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இப்பேரிடரில் சிக்கிய கொளஞ்சியப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழக அரசின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4.லட்சத்தை அவர்களது குடும்பத்தினரிடம்  திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் உடன் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், RI திரு.சந்திரசேகரன்,VAO திரு.ஜெய் கணேஷ்,வட்டச் செயலாளர் திரு. கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form