திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் சிறு குறு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்
திருச்சி, மார்ச் 18: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த
மனுவில் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்கள் அரசு ஊழியர்களுக்கு மத்திய மாநில அரசாங்கத்தால் ஊழியர்களுக்கு வழங்குவது போன்று எந்த சலுகையும் எங்கள் வணிகர்களுக்கு கிடைப்பது இல்லை
வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்குவது போல் வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ட்ரைடு லைசென்ஸ் என்ற லைசென்ஸை ஒரு முறை எடுத்தால் போதும் என்று அறிவிக்க வேண்டும்.
சொத்து வரி குப்பை வரி ட்ரைடு சென்ஸ்களை 2023/24 மற்றும் 24 ,25 25 ,26 ஆகிய மூன்று ஆண்டுகளின் நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்தம் செய்கிறார்கள் மாநகராட்சி ஆணையர் நடப்பு ஆண்டு 2025 /26 கணக்கு வரிகளை மாத்திரம் வசூல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்
சொத்து வரி கட்டுவதற்கு கால தாமதம் ஆனால் அதற்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் சொத்து வரி உயர்வை மறுப் பரிசீலனை செய்ய வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.