திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஆண்டவர் இயேசுவின் 27ம் ஆண்டு பாஸ்கா விழா
கிறிஸ்தவர்களின் தவசு காலத்தை முன்னிட்டு நடைபெற்றது.
திருச்சி பொன்மலை சூசையப்பர் தேவாலய வளாகத்தில் கிறிஸ்துவ கடவுளான இயேசு கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் வகையில் பாஸ்கா எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்மலை பங்கு தந்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் தவசு காலம் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின் நோன்பு காலத்தில் நடக்கும் இந்த பாஸ்கா நிகழ்ச்சியானது தொடர்ந்து 27 வருடங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கம், உலகத்தில் செய்த கடவுளுடைய போதனைகள், அவர் செய்த அற்புதங்கள், அவரை சிலுவையில் அறைந்த கதைகள், கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் உள்ள கதைகள் ஆகியவற்றினை பற்றி விளக்கி இந்த பாஸ்கா நிகழ்ச்சியானது நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஆணி அடித்து அறையப்படும் காட்சியினை தத்ரூபமாக இருப்பதை கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர்.
பொன்மலை பாஸ்கா கலைக்குழுவினர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியினை பாஸ்கா கலைக்குழுவினர் மற்றும் பாஸ்கா கலைக் குழுவை சார்ந்த இளையோர் இயக்கித்தினர் சிறப்பாக ஏற்படுத்தியிருந்தனர்.
இதில் பொன்மலை மட்டுமல்லாது திருச்சியில் இருந்து பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.