தமிழ்நாடு மக்கள் உரிமை முக்கிய தீர்மானங்கள்

தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

 தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்


நாமக்கல், நவ 25:                              தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆலோசனை கூட்டம்   நாமக்கலில் உள்ள அலுவலகத்தில் மாநில இணை செயலாளர் ஷேக்தாவூத் தலைமயில் நடைபெற்றது.

இதில்  நாமக்கல் ஒன்றிய செயலாளர் தியாகராஜன்,வரவேற்புரையாற்றினார்

 மகளீர் அணி மாவட்ட செயலாளர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

 சிறப்பு அழைப்பளராக மாநில இணை இயக்குனர் பழனிவேல்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம்.1

நமது அமைப்பின் சார்பில் டிசம்பர் 10. ஆம் தேதி அன்று ஆட்டையாம்பட்டியில் நடைபெறும் முப்பெறும் விழாவில் நாமக்கல் மாவட்டம் சார்பாக 100. பேர் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம்2

சேலம் இராசிபுரம் வழியாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுகிறார்கள் இதனால் பழையபேருந்து நிலையம் செல்ல பயணிகள் சிறமப்படுகிறார்கள் மேலும் அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல 10. ருபாய் பயனகட்டனம் கொடுத்து செல்லும் அவலநிலை உள்ளது மக்கள் நலனை கருதி சேலம் இராசிபுரம் வழியாக வரும் பேருந்துகளில் பயணகட்டனம் குறைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கூட்டம் ஆட்சியர் அவர்களை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம்3                                        

சொந்தவீடு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் உமா வெங்கடாஜலம் சித்திராதேவி சுப்பரமணி முத்துசாமி வைத்திலிங்கம் சரவனன் நல்லுசாமி கார்திக் ஜெயகுமார் சினிவாசன் முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்

முடிவில் வீராசாமி நன்றி கூறினார் 


Post a Comment

Previous Post Next Post

Contact Form