11 வது ஆண்டு துவக்க விழா திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி நவ,28: திருச்சிமாவட்டம் புள்ளம்பாடி வட்டாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 11 வந்து ஆண்டு துவக்க விழா திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு புள்ளம்பாடி வட்டாரத் தலைவரும் சரடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜமாணிக்கம்,மாநில விவசாயபிரிவு துணைத்தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் டிஆர்.தர்மராஜ் புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் சிவராமன்,கிழக்கு மாவட்ட துணை தலைவர் ஜெயப்பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளர் மருதநாயகம்,டெல்டா மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜுவ்காந்தி, இளைஞரணிமாவட்ட தலைவர் கண்ணாகுடி ஊராட்சி மன்ற தலைவருமான சுகன்,புள்ளம்பாடி நிர்வாகிகள் திருநாவுக்கரசு,சகாதேவன்,பாரதி, கல்லக்குடி நிர்வாகிகள் பாண்டியன், மணிகண்டன்,சம்பத் உள்ளிட்ட மாவட்ட,வட்டார,கிராமகமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக மேற்கு வட்டாரதலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
முடிவில் நகர தலைவர் தனராஜ் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார தமாகா சார்பில் செய்திருந்தனர்.