குறு வடிவ சந்திராயன் ராக்கெட்

 குடியரசு இந்திய நாணயங்களை கொண்டு குறு வடிவ சந்திராயன் ராக்கெட் மாதிரியை வடிவமைத்த நாணயவியல் சேகரிப்பாளர்க்கு விருது


திருச்சி, செப்,26:                     திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் குணசேகரன் 1950 முதல் 2023ஆம் ஆண்டு வரை வெளிவந்த குடியரசு இந்திய நாணயங்களை கொண்டு சந்திராயன்-3 குறுவடிவ  ராக்கெட் வடிவமைத்து குடியரசு இந்திய நாணயங்கள் வரலாற்றை எடுத்துரைத்ததை பாராட்டி பாரம்பரிய காவலர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form