பாலிமர் பணத்தாள்
திருச்சி, செப்,26: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் செயலர் குணசேகரன் பொருளாளர் அப்துல் அஜீஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
கண்காட்சியினை பார்வையிட வருகை தந்த பள்ளி மாணவர்களிடம் பாலிமர் பல தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், உலகில் பல நாடுகள் பாலிமர் ரூபாய் பணத்தாள்களை ஏற்றுக்கொண்டன, இதில் பாரம்பரிய காகித பணத்தாள்களில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பாலிமர் பணத்தாள் பாலிப்ரோப்பிலீன் , ப்ரோப்பிலீனின் பாலிமரைசேஷன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை பிசின் , இது பாரம்பரிய காகித பணத்தாளிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. பாலிமர் பணத்தாள் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது . பாலிமர் பணத்தாளில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிமர் பணத்தாள் நீடித்த பயன்பாட்டிற்கும் நீர்ப்புகா மற்றும் கறை படியாததாக அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பாலிமர் பணத்தாள்கள் காகித பணத்தாள்களை விட 2.5 மடங்கு நீண்ட காலம் நீடிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக, புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட தேய்ந்த பாலிமர் பணத்தாள்களை வீடு, கட்டிடம் மற்றும் தொழில்துறை பொருட்களாக மறுசுழற்சி செய்யலாம் என்றார். தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சேகரிப்பு கலைஞர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.