தொல்லியல் நாணயவியல் கழகத்தினருக்கு பாராட்டு!

 குடந்தை தொல்லியல் நாணயவியல் கழகத்தினருக்கு பாராட்டு! 


திருச்சி, செப் 26:                  திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் பணத்தாள்கள், நாணயங்கள் வரலாற்றை எடுத்துரைத்தனர்.

குடந்தை தொல்லியல் நாணயவியல் கழக நிறுவனர் செல்வி முத்தையா, தலைவர் சுப்பிரமணியன், செயலர் கணேசன், இணை செயலர் சரவணன் உள்ளிட்டோரை சென்னை காயின் கிளப் தலைவர் சென்னை மணிகண்டன் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தினர் பாராட்டினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form