புதிய பாதை அறக்கட்டளையின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்:
திருச்சி, செப். 21: ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை மூலம் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொடக்கப்பள்ளி எடமலைப்பட்டி புதூர் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா , தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பொன்மலைப்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அசிம் கலந்து கொண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார். இந்நிகழ்வினை புதிய பாதை அறக்கட்டளை நிறுவனர்
தீபலட்சுமி, அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முஹம்மது ஷெரிப்,அருணாச்சலம், ஆர்ம்ஸ்ட்ராங்ராபி, பக்கிரிசாமி ஆகியோர் விழா ஏற்பாட்டினை முன்கூட்டியே செய்தனர். நிகழ்வின் இறுதியாக நிறுவனர் தீபலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.