மக்களை அச்சுறுத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டிடம்.
திருச்சி, செப், 19: திருச்சி உக்கடை அரியமங்கலம் வடக்கு பகுதியில் கலிபா பள்ளிவாசல் செல்லும் வழியில் பாம்பே ஸ்டோர் என்ற பழமையான குடியிருப்பு கட்டிடம் உள்ளது இதில் தற்போது யாரும் வசிக்காததால்.
இந்த கட்டடம் பராமரிப்பு இன்றி சுவர்கள் விரிசல் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு: இதில் மின் இணைப்பும் உள்ளதால் மிகவும் ஆபத்தான நிலை உள்ளது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்



