திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
திருச்சி, ஜூலை.4: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024/25ம் கல்வி ஆண்டில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பதவி உயர்வு மூலம் நிறைப்பிடும் வரை அல்லது இக்கல்வி ஆண்டு இதில் எது முன்னரோ அது வரையில் தகுதி பெற்ற பணி நாடுநர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தெரிவு செய்து தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19இன் படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது,
தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 18.000 /தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 15,000/தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கான மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 12.000/
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட விவரம் 1 விலங்கியல்
பட்டதாரி ஆசிரியர் காலி பணியிட விவரம் - 7
தமிழ் 1 கணிதம் -2. அறிவியல் 1 சமூக அறிவியல் - 3.
இடைநிலைஆசிரியர் காலி பணியிட விபரம் -15
முன்னுரிமை,பழங்குடியினர்.பழங்குடியினர் இல்லாத பட்சத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்கள் இல்லாத பட்சத்தில் இதர வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
விண்ணப்பிக்கும் முறை இடைநிலை / பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி)கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,எழுத்து மூலமாக விண்ணப்பித்தினை நேரடியாகவோ,அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வி தகுதி /சான்றிதழுடன் 1. திட்டஅலுவலர் பழங்குடியினர் நலம் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் துறையூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அஞ்சல் கோடு: 621010 (அல்லது ) 2 திட்டஅலுவலர் பழங்குடியினர் நலம் பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அஞ்சல் கோடு 620001 . (அல்லது )மின்னஞ்சல் முகவரி botibaldri@gmail.com சமர்ப்பிக்க வேண்டும்,
சமர்ப்பிக்கும் கடைசி நாள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு.15.7-2024 கடைசி நாள்.பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு 9-7-2024 கடைசி நாள் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு 9-7-2024
குறிப்பிட்ட காலத்தில் மேல் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.